ஜப்பானில் உப்பு நீரில் கரையும் பிளாஸ்டிக்கை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சுற்றுச் சூழல் மாசடைவதை தடுப்பதற்காகவும் உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜப்பானில் உள்ள எமர்ஜென்ட் மேட்டர் சயின்ஸ் ஆய்வு நிலையத்தின் விஞ்ஞானிகள் இந்த புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர்.
இந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தும்போது உறுதியானதாக இருக்குமெனவும் , உப்புத் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து விடும் தன்மைகொண்டது எனவும் ஆராய்ச்சி குழுவுக்கு தலைமை வகித்த விஞ்ஞானி டகுசோ அய்தா தெரிவித்துள்ளார்.
குறித்த பிளாஸ்டிக் தண்ணீரில் கரைந்ததும், அது மக்கும் தன்மையை பெறுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 10 times, 1 visits today)