உலகிற்கு ஆபத்தாக மாறியுள்ள காலநிலை – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஆய்வாளர்கள்
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் பல்வேறு அசாதாரண சுற்றுச்சூழலை எதிர்கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கடல் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இது குறித்த மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
வெயில் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் நேரங்களில் அண்டார்க்டிக் கடல் பகுதிகளில் உருகிய பனிப்பாறைகள் மீண்டும் அதன் நிலையை எட்ட வேண்டும்.
அவ்வாறு பனியாக மாறினால் மட்டுமே வருங்காலங்களில் வெயிலை சமாளித்து வறட்சி நிலையை தவிர்க்க முடியும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து.
ஆனால் அண்மையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கடல் ஆராய்ச்சியாளர் Edward Doddridge நடத்திய ஆய்வுகளில் அண்டார்க்டிக் கடலைப் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
உறைபனி கடலாக இருக்கும் அண்டார்டிகா பகுதியில் வெயில் காலங்களில் உருகும் பனிக்கட்டிகள் குளிர்காலத்தில் மீண்டும் அதன் நிலைக்கு வருவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதிலும் முதல்முறையாக அண்டார்டிக் கடலோரப் பகுதிகள் பனி இன்றி காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் ஃபைவ் சிக்மா ஈவெண்ட் எனக்கூறும் தாக்கங்கள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.
கடலில் உள்ள பனி பாறைகள் நம் பூமியின் தட்பவெப்ப நிலையை தக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. சூரியனின் கதிர்வீச்சு நேரடியாக பூமியில் பட்டு தாக்காமல் பனி பாறைகள் அவற்றை திருப்பி அனுப்புகின்றன. அப்படிப்பட்ட பனி பாறைகள் குறையும் பட்சத்தில் சூரிய கதிர்வீச்சுகள் நேரடியாக பூமியில் பட்டு பூமியின் தட்பவெப்ப நிலை பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.
ஆண்டாண்டுக்கு உறைந்து, உருகும் மாற்றங்கள் நிகழாமல் போனால் சுற்றுச்சூழல் சக்கரம் பாதிக்கப்பட்டு புவியில் உள்ள சிறு சிறு ஆல்கேக்களும், பனிக்கட்டிகளுக்கிடையே வாழும் பென்குவின், சீல் போன்ற உயிரினங்களும் பாதிக்கப்படும் என்கின்றனர்.
ஆனால் இந்த இயற்கை மாற்றங்கள் இந்தாண்டு நிகழாமல் போனதற்கு கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமா அல்லது நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமா என்பது தெளிவாக அறியப்படவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் மருத்துவர்கள் நம்புவது நம் பூமியில், கடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்றோடு தொடர்புடையவை ஆகும். ஏதேனும் ஒரு இடத்தில் நிகழும் மாற்றம் என்றாலும் அது புவியில் கடல் மட்டத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.
பிளாஸ்டிக் பயன்பாடு, கடல்நீரில் எண்ணெய் கலப்பது , கடல்நீர் மாசடைவது போன்ற எல்லா செயல்பாடுகளும் நம் அடுத்த தலைமுறையினருக்கான ஒரு காலநிலை எச்சரிக்கையாகத்தான் அமைகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.