மில்லியன் கணக்கான மக்களின் தூக்கமின்மை பிரச்சனைக்கான காரணம் வெளியானது

உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தூங்க முடியாமல் தவிக்கும் காரணம், தலையணைகள் அல்ல குடலில் உள்ள நுண்ணுயிரிகள்தான் என புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
ஜெனரல் சைக்கியாட்ரி மருத்துவ இதழில் வெளியான இந்த ஆய்வில், தூக்கமின்மை மற்றும் குடல் பாக்டீரியாவுக்கு இடையிலான தொடர்பு பரிசோதிக்கப்பட்டது.
சீனாவின் நான்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஷாங்யுன் ஷி தலைமையிலான குழு, 3.8 லட்சம் பேரின் தரவுகளை ஆய்வு செய்து, தூக்க குறைபாடும், பாக்டீரியா வகைகளின் மாற்றமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என கண்டறிந்தது.
71 வகையான பாக்டீரியா குழுக்கள் பொதுவாக இருந்தன. 14 பாக்டீரியா குழுக்கள் தூக்கமின்மையுடன் நேர்மறை தொடர்புடையவையாகும்.
8 குழுக்கள் எதிர்மறை தொடர்புடையவையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடோரிபாக்டர் வகை பாக்டீரியா தூக்கமின்மையுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இது நல்ல குடல் ஆரோக்கியம் மற்றும் குறைந்த வீக்கத்துடன் இணைக்கப்படுகிறது.
ஆனால், IBD, உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் இதன் அளவு குறைவாகவே காணப்படுகிறது.
தூக்கமின்மை குடல் நுண்ணுயிரிகளின் அமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சில பாக்டீரியா குழுக்களில் 43 –79 சதவீத குறைப்பு, மற்ற சில குழுக்களில் நான்கு மடங்கு அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, ப்ரீபயாடிக்குகள், புரோபயாடிக்குகள் போன்றவை தூக்க சிகிச்சைகளில் இடம் பெறலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இனவழிமுறைகள் மற்றும் வாழ்க்கைமுறைகள் போன்ற காரணிகளை இவ்வாய்வு உறுதிப்படுத்தவில்லை எனவும், மேலும் ஆராய்ச்சி தேவை எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.