மனித உணர்வுகளை கொண்ட ரோபோவை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
அமெரிக்காவில்மனிதனை போன்ற உணர்வுகள் கொண்ட ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
நமது உலகில் விஞ்ஞானமானது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதில் ஒரு படியாக விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளனர்.
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அது என்னவென்றால் வியர்வை, நடுக்கம் மற்றும் மூச்சு விடுதல் போன்ற உணர்வுகள் அடங்கிய ஒரு புதுவித ரோபோவை உருவாக்கி உள்ளனர்.
இந்த ரோபோ ஆன்ட்டி (ANDI) என்று அழைக்கப்படுகிறது. இந்த புதுமையான ரோபோவை அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து தெர்மெட்ரிக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆன்ட்டி ரோபோ உலகின் முதல் வியர்க்கக்கூடிய ரோபோவாகும்.
அரிசோனா மாநில பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான கொன்ராட் ரைகாசெவ்ஸ்கி கூறுகையில், ஆன்ட்டி ரோபோவானது மனித உடலில் வெப்பம் மற்றும் தீவிர வெப்பநிலையின் விளைவுகளை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் 35 தனித்தனியாக கட்டுப்படுத்தக்கூடிய மேற்பரப்புகள் உள்ளது. இந்த மேற்பரப்புகள் மனித உடலில் காணப்படும் சிறிய துளைகள் போல இருக்கும். இதனால் இந்த ரோபோவானது வெவ்வேறு வெப்ப நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது என்று கூறியுள்ளார்.