செவ்வாய் கிரகத்தில் ஸ்மைலி ஃபேஸ் வடிவ அமைப்பை கண்டுப்பிடித்த விஞ்ஞானிகள்!
வானியலாளர்கள் செவ்வாய் கிரகத்தில் ஒரு ஸ்மைலி-ஃபேஸ் வடிவ அமைப்பைக் கண்டுபிடித்துள்ளனர்.
இது சிவப்பு கிரகத்தில் கடந்த கால வாழ்க்கையின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அத்துடன் இந்த வடிவம் வரண்ட மற்றும் பழங்கால நீரின் எச்சங்களாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த எமோஜி போன்ற எச்சத்தை , அகச்சிவப்பு கேமராவில் பார்க்கும்போது மட்டுமே தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்மைலி முகம் எவ்வளவு பெரியது என்று விஞ்ஞானிகளுக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சமீபத்தில் பட்டியலிடப்பட்ட 965 உப்பு வைப்புகளில் இதுவும் ஒன்றாகும், இது 1,000 முதல் 10,000 அடி அகலம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்பு வைப்பு என்பது ஒரு கிரக மேற்பரப்பில் காணப்படும் உப்பு – அல்லது குளோரைடு – திரட்சியாகும்.
2016 ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள மீத்தேன் மற்றும் பிற வாயுக்களின் அளவை அளந்து வரும் எக்ஸோமார்ஸ் டிரேஸ் கேஸ் ஆர்பிட்டரைப் பயன்படுத்தி ESA இந்தப் படத்தைப் படம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.