புற்றுநோயை உருவாக்கும் நச்சு இரசாயனங்களை உறிஞ்சும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு!

PFAS எனப்படும் ‘ஃபாரெவர் கெமிக்கல்கள்’, புற்றுநோய் மற்றும் பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும் ஆபத்தான ரசாயனங்களாகும். இவை உடலில் நீண்ட காலம் தங்கி, உறுப்புகள் மற்றும் ஹார்மோன்களை பாதிக்கும் தன்மையுடையவை.
இவற்றை எதிர்த்துப் போராட, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முக்கியமான கண்டுபிடிப்பை செய்துள்ளனர். மனித குடலில் வாழும் ஆரோக்கிய பாக்டீரியாக்கள் PFAS இரசாயனங்களை உறிஞ்சி, அவற்றை மலம் வழியாக வெளியேற்றும் திறன் கொண்டுள்ளன என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
Odoribacter splanchnicus எனும் பாக்டீரியா, PFAS ஐக் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் திறனைக் கொண்டதாகவும், எதிர்காலத்தில் புரோபயாடிக் சப்ளிமென்ட் வடிவத்தில் இதைப் பயன்படுத்த முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு, PFAS போன்ற நச்சு இரசாயனங்களால் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் புதிய தீர்வுக்குத் துவக்கம் எனக் கருதப்படுகிறது