ஐரோப்பா

ஜெர்மனியில் திடீரென மூடப்பட்ட பாடசாலை – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஜெர்மனியின் பாடசாலை ஒன்றின் நிர்வாக சீர்கேடு காரணமாக அந்த பாடசாலை மூடப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் சிறசிஸ்கொல்சைன் மாநில அமைச்சர் அவர்கள் அந்த மாநிலத்தில் உள்ள ஒப்ஃனஸ் ஸ்கூல் என்று சொல்லப்படுகின்ற ஒரு பாடசாலையை மூடியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

அதாவது பிறயட் டொப்ஃ என்று அழைக்கப்படுகின்ற இந்த பாடசாலையின் நிர்வாகம் விரும்பியப் படி இந்த பாடசாலையை நடத்தியுள்ளது.

குறிப்பாக இந்த பாடசாலையின் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது இல்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த பாடசாலையின் 7 ஆசிரியர்கள் கல்வி கற்பித்த நிலையில் தற்பொழுது 2 ஆசிரியர்களே கல்வி கற்பித்து வருவதாக தெரியவந்திருக்கின்றது.

குறித்த பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சு சோதனையை மேற்கொண்டுள்ளது.

இந்த கல்வி அமைச்சியின் சோதனையால் இந்த முறைக்கேடு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

இந்நிலையில் பாடசாலை நிர்வாகமானது இவ்வகையான சீர்கேடுக்கு பல வகையான திருப்திகரமற்ற கருத்துக்களை தெரிவித்ததாகவும் தெரியவந்திருக்கின்றது.

மேலும் பாடசாலை மூடப்பட்டதறகு எதிர் நடவடிக்கையாக பாடசாலையின் அதிபர் மேல் முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த பாடசாலை நிர்வாகமானது கல்வி அமைச்சுக்கு 10 ஆயிரம் யுரோவை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று கல்வி அமைச்சு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!