பிரித்தானியாவில் திடீரென மூடப்பட்ட பாடசாலை – பதற்றத்தில் பெற்றோர்!
பிரித்தானியாவின் யார்க்ஷயரில் (Yorkshire)உள்ள பாடசாலை ஒன்று துப்பாக்கிச் சூடு அச்சுறுத்தல் காரணமாக இன்று மூடப்பட்டுள்ளது.
ஹவ்டன் (Howden) என்ற பாடசாலையின் மைதானத்தில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலை மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் வகுப்பறைக்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினர் மின்னஞ்சல் மூலம் பெற்றோருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விரிவான சோதனையில் அச்சுறுத்தல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 3 visits today)




