இலங்கையில் பாடசாலை அதிபரின் மோசமான செயல் – கைது செய்த பொலிஸார்

எஹலியகொட பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவர் 30,000 ரூபாய் கையூட்டலை பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் மதிய நேர உணவை வழங்குவதற்காக பதிவு செய்திருந்த நபரொருவரிடம் இருந்தே குறித்த அதிபர் கையூட்டலைப் பெற முயற்ச்சித்துள்ளார்.
மத்திய நேர உணவு வழங்கும் செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமாயின் தமக்கு பணம் வழங்குமாறு சந்தேக நபரான பாடசாலை அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றில் முன்னிலையில் படுத்தப்பட்டார்.
இதன் படி அவரை எதிர் வரும் 03 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
(Visited 13 times, 1 visits today)