கேரளாவில் பள்ளி பேருந்து விபத்து – 11 வயது மாணவி உயிரிழப்பு
கேரள மாநிலம் கண்ணூரில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 5ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
குருமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சின்மயா வித்யாலயாவைச் சேர்ந்த பேருந்து, 15 மாணவர்களுடன், நெடுஞ்சாலையில் நுழையும் போது, சாய்வாகச் சென்று கொண்டிருந்தபோது, ஸ்ரீகண்டாபுரத்தில் உள்ள வாழக்கையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால், 11 வயது நெத்யா எஸ் ராஜேஷ் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரேக் செயலிழந்ததே விபத்துக்குக் காரணம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன, ஆனால் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
படுகாயம் அடைந்த 13 மாணவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தலிபரம்பா தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடல் பரியாரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.