இந்தியாவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தைகள்!

ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அரசுப் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரசுப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. ஒற்றை மாடி கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்தபோது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 குழந்தைகள் வளாகத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாக அதிகாரிகள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பேரிடர் நிவாரணக் குழுவினர் மீட்புப் பணிகளுக்காக சம்பவ இடத்தில் உள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வட்டாரங்களின்படி, கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்ததாகவும், இது தொடர்பாக முன்னதாக பல புகார்கள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்படுகிறது.