இலங்கை

கொழும்பில் உடல் மசாஜ் நிலையமொன்றில் நடந்த மோசடி: தம்பதிகள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது

தனிநபரிடம் ரூ.1 மில்லியன். பணப்பரிமாற்றம் செய்ய வற்புறுத்திய குற்றச்சாட்டில் தம்பதிகள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டியில் உடல் மசாஜ் நிலையம் ஒன்றிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்டவருக்கு உடல் மசாஜ் செய்வதாக அழைத்து அவர் வந்தவுடன் சேவை வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

இருப்பினும், இடத்தை அடைந்ததும், அவரை தம்பதியினர் மிரட்டி தாக்கினர், அவர்கள் ரூ.1 மில்லியனை ஆன்லைன் வங்கி பரிமாற்றம் செய்யுமாறு மிரட்டியுள்ளனர் என
பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிய்வ்துள்ளன்ர்.

அத்துடன் சந்தேகநபர்கள் பாதிக்கப்பட்டவரின் பணப்பையில் இருந்து ரூ. 15,000 எடுத்துள்ளனர்.

குற்றத்திற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியுடன் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 44 மற்றும் 54 வயதுடைய தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அடுத்து, இரத்மலானை மற்றும் கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 23 வயதுடைய மேலும் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்