SAvsIND T20 – தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஒவர் தொடரில் விளையாடி வருகிறது.
முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஜோகன்னஸ்பர்க்கிலும் மழை குறுக்கிடலாம். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
இரவில் மழை பெய்வதற்கு 25 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 7 times, 1 visits today)