SAvsIND – தென் ஆப்பிரிக்கா அணிக்கு 212 ஓட்டங்கள் இலக்கு
தென் ஆப்பிரிக்கா – இந்தியா மோதும் 2-வது ஒருநாள் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் – சாய் சுதர்சன் களமிறங்கினர். ருதுராஜ் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்ட 2-வது பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த திலக் வர்மா தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 10 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து சாய் சுதர்சனுடன் கேப்டன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்சன் அரை சதம் அடித்து அசத்தினார்.
அவர் 62 ரன்கள் எடுத்திருந்த போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது.
அடுத்து வந்த சாம்சன் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினார். பிறகு 1 ரன் எடுப்பதற்கே மிகவும் திணறினார். இதனால் 23 பந்துகள் சந்தித்த அவர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.
விக்கெட்டுகள் இழந்தாலும் ஒரு முனையில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிங்கு சிங் 17, அக்ஷர் படேல் 7, குல்தீப் 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் இந்தியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.