ஆசியாவுக்கான எண்ணெய் விலையை உயர்த்திய சவுதி!
ஆசியாவுக்கான எண்ணெய் விலையைத் தொடர்ந்து 4வது மாதமாக சவுதி அரேபியா உயர்த்தியுள்ளது.
எண்ணெய்ச் சந்தையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை நீட்டிக்க அந்நாடும் ரஷ்யாவும் முடிவெடுத்த மறுநாள், விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சவுதி அரசாங்கத்தின் Saudi Aramco நிறுவனம் Arab Light ரக எண்ணெயின் விலையைப் பீப்பாய்க்குப் 10 காசு கூட்டியது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அந்த அளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை.
இருப்பினும் எதிர்பார்க்கப்பட்ட 30 காசு ஏற்றத்தைவிட அது குறைவாகும்.
OPEC எனும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு, அமெரிக்காவுக்கு விநியோகிக்கப்படும் அனைத்து ரகங்களுக்குமான எண்ணெய் விலையை இதுவரை இல்லாத அளவுக்குப் பீப்பாய்க்கு 20 காசு அதிகரித்தது.
(Visited 5 times, 1 visits today)