ஆசியா செய்தி

லக்னோவில் அவசரமாக தரையிறங்கிய ஹஜ் யாத்ரீகர்களுடன் சென்ற சவுதி விமானம்

லக்னோ விமான நிலையத்தில் சவூதி அரேபிய விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமானி சாதுர்யமாக செயல்பட்டு தரையிறக்கியதால் பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த 250 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து லக்னோவிற்கு 250 பயணிகளுடன் ஏர்பஸ் ஏ330-343 பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் பெரும்பாலும் ஹஜ் புனித யாத்திரை சென்ற பயணிகளே இருந்தனர். அவர்கள் மெக்கா, மெதீனாவில் புனித யாத்திரை மேற்கொண்டு தாயகம் திரும்பினர்.

இந்நிலையில், விமானம் லக்னோ விமான நிலையத்தில் தலையிறங்க முற்பட்ட போது அதன் இடது சக்கரப் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விபரீதத்தை உணர்த்தினார். இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!