செய்தி விளையாட்டு

4347 கோடி செலவில் பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள சவுதி அரேபியா

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் IPL 20 ஓவர் போட்டி 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் 20 ஓவர் லீக் தொடர் நடத்தப்படுகிறது.

IPL போலவே ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் போட்டியும் புகழ்பெற்றது. தென் ஆப்பிரிக்க லீக் உள்ளிட்ட பல போட்டிகளும் பிரபலம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில் உலகளாவிய கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த நாடு ரூ.4347 கோடியை முதலீடு செய்ய தயாராக உள்ளது.

உலகளாவிய இந்த கிரிக்கெட் ‘லீக்’ போட்டியில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

சவுதி அரேபியா உள்ள எஸ்.ஆர்.ஜே நிறுவனம் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தொடர்ந்து பேசி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் தொழில் முறை லீக்குகளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டேனி டவுன்செனட் தலைமையிலான குழு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!