வரலாற்றில் முதல்முறையாக பாலஸ்தீனத்துக்கான தூதரை சவூதி நியமித்துள்ளது
வரலாற்றில் முதல்முறையாக பாலஸ்தீனத்துக்கான தூதரை சவூதி அரசு நியமித்துள்ளது.
அதன்படி, தற்போது ஜோர்டான் தூதராக பணியாற்றி வரும் நயீப் அல் சுதைரி, பாலஸ்தீன தூதுவராகவும் பணியாற்றவுள்ளார்.
தற்போது, பாலஸ்தீனியர்கள் மத்தியதரைக் கடல் பகுதி, மேற்குக் கரை மற்றும் காசா பகுதி ஆகியவற்றில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
தூதுவர் நியமனம் பலஸ்தீனியர்களின் உரிமைகளுக்கான சவுதி அரேபியாவின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எவ்வாறாயினும், சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலுடன் முறையான இராஜதந்திர உறவுகள் பரிசீலிக்கப்பட்டு வரும் பின்னணியிலேயே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்தச் சிக்கல் நிலை 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்தின் மூலம் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் நிலம் பிரிக்கப்பட்டது.