நடந்தே சென்று அவுஸ்திரேலிய பிரதமரை சந்தித்த இலங்கை அகதி
விசா இல்லாமல் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதி ஒருவர் 1000 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அரசாங்கம் எந்த விளக்கமும் இல்லாமல் அவரது விசாவை ரத்து செய்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகிவிட்டது.
அவுஸ்திரேலியாவின் கடுமையான புகலிட எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிராக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நோக்கில் அவர் நடந்துச் சென்றுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் 3 நாட்களாக 1000 கி.மீ தூரம் பயணம் செய்து அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசை சந்தித்து அகதிகளின் துயரங்களை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
விசா இல்லாமல் வேலை செய்யவோ அல்லது இலவச மருத்துவ சேவைகளை பெறவோ இயலாது என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
(Visited 4 times, 1 visits today)