சூடானுக்கு உதவ ஐ.நாவிற்கு 10 மில்லியன் டாலர் நிதி வழங்கிய சவுதி
மோதலால் பாதிக்கப்பட்ட சூடானுக்கு குடிநீர் வழங்கவும் போரினால் சேதமடைந்த குழாய் வலையமைப்புகளை மறுசீரமைக்கவும் சவுதி அரேபியா(Saudi Arabia) ஐக்கிய நாடுகள் சபைக்கு 10 மில்லியன் டாலர் நிதி வழங்கியுள்ளது.
சவுதி மேம்பாட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷத்(Sultan Abdulrahman Al-Marshad), ஐ.நாவுக்கான சூடானிய நிரந்தர பிரதிநிதி ஹசன் ஹமீத் ஹசன்(Hassan Hamid Hassan) மற்றும் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் பர்ஹாம் சாலிஹ்(Barham Salih) ஆகியோர் சுவிட்சர்லாந்தின்(Switzerland) ஜெனீவாவில்(Geneva) ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
சூடானின் முக்கிய நீர் வலையமைப்புகளை மறுசீரமைத்தல் மற்றும் விரிவுபடுத்துதல், தலைநகர் கார்ட்டூமில்(Khartoum) நைல் நதி நீர் விநியோகத்தை மேம்படுத்துதல் மற்றும் சூரிய ஆற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துதல் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
இந்நிலையில், சூடான் மக்களுக்கு குடிநீர் அணுகலை மேம்படுத்துதல், மாசுபாட்டுடன் தொடர்புடைய நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் அபாயங்களைக் குறைத்தல் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சவுதி அரேபியா குறிப்பிட்டுள்ளது.
சவுதி, கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான்(Pakistan), காசா(Gaza), லெபனான்(Lebanon) மற்றும் சோமாலியா(Somalia) உள்ளிட்ட எட்டு வளரும் நாடுகளில் ஐ.நாவுடன் இணைந்து 18 திட்டங்களுக்கு நிதியளித்துள்ளது.
இந்தத் திட்டங்கள் மொத்தம் $85 மில்லியன் மதிப்புடையவை மற்றும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பயனளித்துள்ளது.




