சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு 356 மரண தண்டனைகள் நிறைவேற்றம்
2025ம் ஆண்டில் சவூதி அரேபிய(Saudi Arabia) அதிகாரிகள் 356 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர், இது ஒரே ஆண்டில் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையில் புதிய சாதனையை படைத்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் ரியாத்தில்(Riyadh) தொடங்கப்பட்ட போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தான் மரண தண்டனை அதிகரிப்பிற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் மட்டும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் 243 பேர் தூக்கிலிடப்பட்டதாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
2024ம் ஆண்டில் அதிகாரிகள் 338 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, 2025ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக புதிய சாதனையை படைத்துள்ளது.
சவூதி அரேபியா போதைப்பொருள் வழக்குகளில் மரண தண்டனையைப் பயன்படுத்துவதை சுமார் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்த பிறகு 2022 ஆம் ஆண்டின் இறுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனையை மீண்டும் செயல்படுத்தத் தொடங்கியது.





