ஏமன் மீது தாக்குதல் நடத்திய சவுதி அரேபியா – மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்!
ஏமனில் உள்ள முகல்லா (Mukalla) துறைமுக நகரத்தின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதாக சவூதி அரேபியா இன்று அறிவித்துள்ளது.
கப்பலில் கொண்டுவரப்பட்ட ஆயுதங்களை பிரிவினைவாதப் படைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சவுதி அரேபியா வெளியிட்டுள்ள இராணுவ அறிக்கையில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்தை கருத்தில் கொண்டு, கூட்டணி விமானப்படைகள் வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல், ரியாத் மற்றும் அபுதாபி இடையேயான உறவுகளை மேலும் சிக்கலாக்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





