ஒப்பந்தம் இருந்தும் விலக முடிவு ; சனத் ஜயசூரியவின் அதிரடித் தீர்மானம்
எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடருடன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகப்போவதாக சனத் ஜயசூரிய அறிவித்துள்ளார்.
தனது ஒப்பந்தக் காலம் மீதமிருந்த போதிலும், பதவியில் நீடிக்க விருப்பமில்லை என தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024 இல் முழுநேரப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற இவரது காலத்தில், இலங்கை அணி விளையாடிய 60 போட்டிகளில் 29 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் சனத் ஜயசூரியவின் விலகல், இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





