சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் இணை தலைமை நிர்வாக அதிகாரி மாரடைப்பால் மரணம்

சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
63 வயதான ஹான் ஹாங் ஹீ உயிரிழந்ததை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிந்ததாக சாம்சங் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இணை தலைமை செயல் அதிகாரி உயிரிழந்ததை அடுத்து, அவரது பதவியை ஏற்க இருப்பது யார் என்பது குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
ஹான் சாம்சங் நிறுவனந்தின் நுகர்வோர் மின்சாதனங்கள் மற்றும் மொபைல் சாதனங்கள் பிரிவுக்கு தலைமை வகித்து வந்ததாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)