திருகோணமலை உப்பாறு: சட்டவிரோத மதுபான ஆலை முற்றுகை – இருவர் கைது!
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆறு கடலில் பாயும் உப்பாறுக்கு அருகிலுள்ள சம்பூர் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றினை பொலிஸார் (16)) சுற்றி வளைத்துள்ளனர்.
சுற்றி வளைப்பின் போது இரண்டு சந்தேக நபர்களையும் ஒரு தொகை சட்டவிரோத மதுபானங்களையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏற்கனவே பல குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.





