இலங்கையில் கடுமையான பொருளாதார சிக்கலில் உப்பு உற்பத்தியாளர்கள்

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உப்பு, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
15,000 மெற்றிக் டன்னுக்கும் அதிகளவான இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான உப்பு தட்டுப்பாட்டுக்குப் பிரதான காரணம், உப்பு உற்பத்திக்கு போதுமான சூரிய ஒளி இன்மையும், தொடர்ந்து பெய்துவரும் மழையும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் மொத்த உப்பு உற்பத்தியில் புத்தளம் 60 சதவீத பங்களிப்பை வழங்குவதுடன், போதுமானளவு சூரிய ஒளி கிடைக்கும் காலப்பகுதியில் ஒரு இலட்சம் மெற்றிக் டன்னுக்கும் அதிகளவு உப்பினை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மழை காரணமாக உப்பு உற்பத்தி தடைப்பட்டமையினால் உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.