இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உப்பு – நாளை வரும் கப்பல்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகையின் முதல் கப்பல் போக்குவரத்து நாளைய தினம் முதல் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து 4,500 மெட்ரிக் டன் உப்பு இந்த முறையில் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக அரச வணிக இதர கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த மழைக்காலத்தில் நாட்டின் உப்பு நிலங்களின் அறுவடையில் ஏற்பட்ட தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, வரும் 31 ஆம் திகதிக்குள் 12,500 மெட்ரிக் டன் உப்பு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.





