இலங்கை செய்தி

ஈரான் தூதரகத்துக்கு சென்றார் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) பிற்பகல் இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்துக்குச் சென்றார்.

ஈரானிய தூதரைச் சந்தித்து, மோதல்களால் உயிரிழந்த ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனி மற்றும் ஈரானியர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்தார்.

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.

தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த விசேட அனுதாப குறிப்புப் பதிவேட்டில், ஈரானிய மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனுதாபக் குறிப்பைப் பதிவிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!