எரிபொருள் விலையை குறைக்குமாறு சஜித் வலியுறுத்து!
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை மீண்டும் குறைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, Sajith Premadasa அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இன்று (11) விசேட அறிவிப்பொன்றை விடுத்தே எதிர்க்கட்சி தலைவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
“எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அரசாங்கம் பொய்யுரைத்துள்ளது.
உலக சந்தையில் அதிகரித்த எண்ணெய் விலை சில மணி நேரங்களிலேயே மீண்டும் வீழ்ச்சி அமைந்தது.
எனவே, ஒரு பீப்பாய் எண்ணெய் விலை இருந்ததை விட மேலும் குறைந்து கொண்டிருப்பதால் இந்த விலை அதிகரிப்பை நியாயப்படுத்த முடியாது.” எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
கண்முன்னே நடைபெறும் அழிவை பார்த்தபடி யதார்த்தமற்ற அடிப்படையில் இருந்து நாட்டை ஆள்வதற்கு முற்படக்கூடாது.
மக்கள் மீது அழுத்தத்தையும் சுமையையும் ஏற்றுவதற்கு பதிலாக, நியாயமான முறையை பின்பற்றி மக்களின் நலனில் அக்கறை கொண்டு எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.




