இலங்கை செய்தி

சங்கடத்தில் சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் கட்சி கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அந்த ஆசனங்களுக்கு ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், டலஸ் அலபெரும, ஜீ. எல்.பீரிஸ் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை நியமிப்பதற்கு முன்னர். முன்மொழியப்பட்டது.

ஆனால், தேசிய பட்டியல் பதவிகளுக்கு ஏரான் விக்ரமரத்ன, மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்று மற்றொரு குழுவினர் கருதுகின்றனர்.

இந்த விடயத்தில் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடும் இணக்கமாகவே காணப்பட்டது.

இந்நிலையில், சஜீவ சேனசிங்கவின் நியமனத்துக்கும் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் ஐந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை அக்கட்சி பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் இன்றும் (19) இடம்பெறவுள்ளது.

(Visited 35 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை