6 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையை விட்டு வெளியேறிய சைஃப் அலி கான்
வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியதால் கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் பிரபலம் சைஃப் அலி கான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது கடந்த வாரம் தாக்குதல் நடந்தது. சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர், அவரை தாக்கினர்.
மொத்தம் ஆறு இடங்களில் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டு இருந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை உட்பட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த ஆறு நாட்களாக அவர் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவரை அங்குத் திரண்டிருந்த அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.