இலங்கை: முன்னாள் அமைச்சர் விஷம் கலந்த உணவை கொடுத்ததாக பரபரப்பு தகவல்
அண்மைக்காலமாக வெளிநாட்டு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் உணவை உட்கொண்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரணசிங்க, சம்பவம் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் டுபாய், மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் உணவை உட்கொண்டதாக தெரிவித்தார்.
ஜப்பானில் இருந்த தாம் ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான சுகவீனமுற்றிருந்ததாகவும், ஜப்பானிய மற்றும் இலங்கை வைத்தியர்களினால் வழங்கப்பட்ட சிகிச்சைகள் காரணமாக நல்ல உடல்நிலை திரும்பியதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
(Visited 12 times, 1 visits today)





