சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் எஸ் ஈஸ்வரனின் வழக்கு விசாரணையில் ஏற்பட்ட மாற்றம்
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனின் வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வழக்கு தொடங்கும் என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு வழக்கு விசாரணை நேற்று தொடங்குவதாக இருந்த நிலையில் திகதி மாற்ற்பபட்டுள்ளது.
ஆனால் வழக்கறிஞரின் வேண்டுகோளுக்கு ஏற்ப வழக்கு விசாரணை திகதி வேறு திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 13ஆம் திகதி விசாரணைக்கான திகதிகளாக முடிவுசெய்யப்பட்டுள்ளன.
மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங் (Davinder Singh) ஈஸ்வரனின் வழக்கறிஞர் குழுவை வழிநடத்துகிறார்.
கடந்த மாதம் தவிந்தர் சிங் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அரசாங்கத் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பெற அவர் முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
வழக்கமாக ஊழல் வழக்குகளின் விசாரணை அரசு நீதிமன்றங்களில் நடைபெறும். ஆனால் வழக்கை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்ய அரசாங்க தரப்பு கடந்த மார்ச் மாதம் விண்ணப்பம் செய்தது. அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. 62 வயதான ஈஸ்வரன் மீது மொத்தம் 35 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.