உக்ரைனில் ரஷ்யா தீவிர தாக்குதல் : 4 பேர் பலி

ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் நான்கு பேர் ரஷ்ய ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
அதே நேரத்தில் உக்ரைனின் பேரழிவிற்குள்ளான கிழக்கு நகரமான அவ்டிவ்காவில் ஒரு புதிய தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவை ரஷ்ய ட்ரோன்கள் தாக்கியதில் மூன்று பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலில்அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு தீப்பிடித்து சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 14 times, 1 visits today)