100,000 சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்துள்ள ரஷ்யாவின் ரெட் விங்ஸ் விமான நிறுவனம்
ரஷ்யாவின் ரெட் விங்ஸ் விமான நிறுவனம் சுமார் 100,000 சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.
இதன் மூலம் 165 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீததுங்க தெரிவித்துள்ளார்.
ரெட் விங்ஸ் விமானத்தில் 410 சுற்றுலாப் பயணிகள் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று நாட்டை வந்தடைந்ததாக அவர் கூறினார்.





