வெள்ளத்தில் மூழ்கிய ரஷ்யாவின் ப்ரிமோரி பிராந்தியம்!
கானுன் சூறாவளியால் பெய்த கனமழையால் ரஷ்யாவின் ப்ரிமோரி பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
அங்குள்ள Usuriysk மற்றும் Spask-Dalny ஆகிய நகரங்களில் 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உசுரிஸ்கில் உள்ள 40 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.






