ரஷ்யாவின் கடற்படை தின கொண்டாட்டங்கள் நிறுத்தி வைப்பு!

பாதுகாப்பு கவலைகள் காரணமாக கடற்படைக்கு மரியாதை செலுத்தும் விழாக்களை ரஷ்யா குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து கிரெம்ளினுக்கு சவாலாக இருப்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், பால்டிக் கடலின் கலினின்கிராட் பகுதி மற்றும் தூர கிழக்கு துறைமுகமான விளாடிவோஸ்டாக்கில் ஆண்டுதோறும் கடற்படை தின கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் நடத்தப்படும் போர்க்கப்பல்களின் அணிவகுப்புகளை ரஷ்ய அதிகாரிகள் ரத்து செய்தனர்.
ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடற்படை தலைமையகத்தைப் பார்வையிட தனது சொந்த நகரத்திற்கு வந்தபோதும், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ஒட்டுமொத்த சூழ்நிலையுடனும், பாதுகாப்பு காரணங்களுடனும் தொடர்புடையது, இவை எல்லாவற்றிற்கும் மேலாகும்” எனத் தெரிவித்துள்ளார்.