ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்! 12 குழந்தைகள் உட்பட 43 பேர் படுகாயம்
உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் கார் தரிப்பிடத்தின் மீது ஏவுகணை தாக்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 43 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய இஸ்கந்தர் ஏவுகணை உள்ளூர் நேரப்படி 13:30 மணியளவில் பெர்வோமைஸ்கி நகரில் தரையிறங்கியது.
உக்ரைன் அரசு வக்கீல் ஜெனரல் Andriy Kostin கூறுகையில், அப்பகுதியில் குடியிருப்பு கட்டிடங்கள் மட்டுமே உள்ளன.
காயமடைந்தவர்களில் ஒரு வயது குழந்தையும் 10 மாத குழந்தையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு கட்டிடங்களை குறிவைப்பது ரஷ்யாவின் மற்றொரு போர்க்குற்றம் என்று கோஸ்டின் கூறியுள்ளார் .
கார்கிவ் பிராந்திய கவர்னர் ஓலெக் சினெகுபோவ், சேதமடைந்த கட்டிடத்தின் பல படங்களை டெலிகிராமில் வெளியிட்டார்.
“குறைந்த பட்சம் அக்கட்டிடத்தில் பாதியளவு மக்கள் வசிக்க முடியாத நிலையில் உள்ளது” என்றுஉள்ளூர் ஊடகங்களால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ரஷ்யா உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் பொதுமக்களை குறிவைத்ததை முன்னர் மறுத்துள்ளது.