ஐரோப்பா

முதன்முறையாக நிலவின் தென்துருவத்துக்கு செல்லும் ரஷ்யாவின் லூனா-25 தானியங்கி நிலையம்

ரஷ்யாவில் இருந்து முதன்முறையாக லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11ம் திகதி ரஷ்யா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளது.

லூனா-24 என்பது சோவியத் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும். இது கடந்த 1976ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. பின்னர் வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது.

இந்தநிலையில் லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11ம் திகதி ரஷ்யா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளது. இந்த திட்டம் வெற்றி பெறும்போது நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் முதல் தானியங்கி நிலையமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதன்மூலம் நிலவில் மென்மையான தரை இறக்க தொழில்நுட்பத்தை சோதனை செய்வது, நீர் உள்பட பல்வேறு வளங்களை ஆராய்வது போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

(Visited 24 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்