ரஷ்யாவின் முதற்கட்ட மோதல்கள் பிரித்தானிய கடற்பகுதியில் துவங்கலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை!
ரஷ்யாவுடனான “மேற்கத்திய மோதலின் முன்னணி” பிரித்தானிய கடற்கரைகளில் இருந்து துவங்கலாம் என இராணுவ உளவுத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுதப்படை அமைச்சர் லூக் பொல்லார்ட், விளாடிமிர் புட்டினின் செயல்பாடு கடலுக்கு அடியில் உள்ள இணைய கேபிள்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
புடினின் படைகள் அவ்வாறு செய்தால், சர்வாதிகாரம் இங்கிலாந்தை முடக்கிவிடும் எனக் கூறப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷெட்லாண்ட் கடற்கரையில் துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்பு பாதை ரஷ்யாவின் வேலை என்று இராணுவ புலனாய்வு நிபுணர்கள் சந்தேகிக்கின்ற நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.
இதேவேளை தொழிற்கட்சி எம்பி பொல்லார்ட், பிரிட்ஸ் தயார் செய்ய வேண்டிய கடலுக்கு அடியில் உள்ள கேபிள் நெட்வொர்க்குகளுக்கு “அச்சுறுத்தல்கள்” இருப்பதாக கூறியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.