உலகம் செய்தி

ஹிஸ்புல்லா படைகளிடம் ரஷ்ய ஆயுதங்கள்… இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு!

லெபனானில் ஹிஸ்புல்லா படைகளின் முகாம்களை சோதனையிட்ட போது ரஷ்ய ஆயுதங்கள் சிக்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்பகுதியில் ஹிஸ்புல்லா படைகள் நூற்றுக்கணக்கான சுரங்கம் தோண்டியுள்ளதுடன், அதில் நவீன ரஷ்ய ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் கண்டெடுத்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரேல் அதிகாரிகள் வெளியிட்டதாக குறிப்பிட்டு Washington Post நாளேடு வெளியிட்ட செய்தியில், லெபனானுக்குள் இஸ்ரேல் நடத்திய சோதனையில் ரஷ்ய மற்றும் சீன டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ரஷ்ய ஆயுதங்கள் தொடர்பில் நெதன்யாகு வெளியிட்ட கருத்துகளுக்கு பதிலளிக்க இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் அமைதி திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே ஹிஸ்புல்லா மீது தாக்குதல் முன்னெடுப்பதாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.

ஹிஸ்புல்லா படைகளை ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட லெபனான் மக்களின் எண்ணிக்கை 1,373 என்றே கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில், கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றே தகவல் கசிந்துள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!