ஆங்கிலக் கால்வாய்குள் நுழைந்த ரஷ்ய கப்பல்கள் – விரட்டியடித்த ரோயல் படை!
ஆங்கிலக் கால்வாயில் பயணித்த ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களை பிரித்தானியாவின் ரோயல் கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ரஷ்யாவின் கொர்வெட் போய்கி (corvette Boikiy ) மற்றும் அதனுடன் வந்த எண்ணெய் டேங்கர் கப்பலான MT ஜெனரல் ஸ்கோபெலெவ் (General Skobelev) ஆகிய கப்பல்களே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் ஆயுதப்படை அமைச்சர் அல் கார்ன்ஸ் (Al Carns ), இந்த நடவடிக்கையின் மூலம், எங்கள் மாலுமிகள் மீண்டும் புடினுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர் – அவரது கடற்படை என்ன செய்கிறது என்பதை நாங்கள் சரியாக அறிவோம்.
ஒவ்வொரு முறையும் ஒரு ரஷ்ய கப்பல் இங்கிலாந்தை நெருங்கும்போது, கடற்படை கண்காணிக்கவும், தடுக்கவும், பாதுகாக்கவும் தயாராக உள்ளது.
நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க வருடத்தின் 365 நாட்களும் உழைக்கும் எங்கள் பணியாளர்களின் தொழில்முறைக்கு நான் மரியாதை செலுத்த விரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.





