சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்த ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்ய உள்ளார்.
இந்த பயணத்தின்போது இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர், கச்சா எண்ணெய் சந்தை, இரு நாட்டு உறவு குறித்து சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
அதேவேளை, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யனையும் ரஷ்ய அதிபர் புடின் சந்திக்கிறார்.
இதனிடையே, ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நாளை ரஷ்யா செல்ல உள்ளார். அங்கு அவர் அதிபர் புடினை சந்திக்கிறார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் உச்சமடைந்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புதின் – மற்றும் ஈரான் அதிபர் ரைசி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)