ஐரோப்பா

கியூபாவில் உள் நுழைந்த ரஷ்யாவின் இராணுவ கப்பல்கள்!

மூன்று ரஷ்ய இராணுவக் கப்பல்களும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலும் கியூபா கடற்பகுதியில் நுழைவதை மாலுமிகள் அவதானித்துள்ளனர்.

கரீபியனில் நடைபெறவிருக்கும் ராணுவப் பயிற்சிகளுக்காக இந்தக் கப்பல்கள் வார இறுதி வரை ஹவானாவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கசான் என்று அழைக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல், புளோரிடாவின் கீ வெஸ்டில் இருந்து தென்மேற்கே சுமார் 100 மைல் தொலைவில் உள்ள ஹவானாவின் துறைமுகத்திற்குள் சென்றுகொண்டிருந்தது.

இந்த நீர்மூழ்கிக் கப்பலானது அணுசக்தியால் இயங்கும் கப்பல் என்றாலும், அதில் அணு ஆயுதங்கள் இல்லை என்பதை அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை ஹவானாவின் துறைமுகத்தில் சிறிய படகுகள் அணிவகுத்துச் செல்வதைக் காண ஏராளமான மக்கள் நிலத்தில் கூடினர்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்