ரஷ்ய MIG-31 விமானம் விபத்தில் சிக்கியது – இருவரை காணவில்லை!

ரஷ்ய MIG-31 விமானம் பசுபிக் கடற்கரையில் விபத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான பயிற்சியின்போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும், அதில் பயணித்த இருவரின் நிலை குறித்து தெரியவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கம்சட்கா தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள அவாச்சா விரிகுடாவில் விமானம் விழுந்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
மீட்புக் குழுக்கள் அதன் இரண்டு பணியாளர்களைத் தேடி வருவதாகவும், விமானத்தில் ஆயுதங்கள் இல்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
(Visited 14 times, 1 visits today)