மீண்டும் ஐரோப்பிய வான்வெளியில் ஊடுறுவிய ரஷ்ய ஜெட் விமானங்கள்!
ரஷ்ய ஜெட் விமானங்கள் ஐரோப்பிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, நேட்டோ மீண்டும் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுளு்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய இராணுவம் தொடர்ந்து துணிச்சலான ஊடுருவல்களைச் செய்து வருவதால், ஐரோப்பிய வான்வெளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அத்துமீறலுக்கு பதிலளிக்கும் விதமாக இராணுவக் கூட்டணி நேற்று மாலை இரண்டு ஸ்பானிஷ் யூரோஃபைட்டர் ( Spanish Eurofighter) விமானங்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளது.
இரண்டு ஜெட் விமானங்கள் – ஒரு Su-30 போர் விமானம் மற்றும் II-78 எரிபொருள் நிரப்பும் டேங்கர் ஆகியன 18 நிமிடங்களில் வான்வெளியில் பறந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் லிதுவேனியாவின் (Lithuania) ஜனாதிபதி ஒரு அறிக்கையில் ரஷ்யாவின் “சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறியதை” கண்டித்துள்ளார்.
(Visited 4 times, 4 visits today)





