கம்சட்காவில் விபத்துக்குள்ளான ரஷ்ய ஹெலிகாப்டர் ; 17 உடல்கள் மீட்பு

கம்சட்கா தீபகற்பத்தில் ரஷ்ய எம்ஐ-8 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பதினேழு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அவசரகால சூழ்நிலை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பெடரல் ஏர் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சியின் முதற்கட்ட தகவல்களின்படி, 19 சுற்றுலா பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்களுடன் ஹெலிகாப்டர் சனிக்கிழமை காணாமல் போனது.
முன்னதாக, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்திய அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகம், அந்த இடத்தில் தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது என்று கூறியது.
(Visited 36 times, 1 visits today)