ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம்!

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வரும் புதன் மற்றும் வியாழக்கிழமையில் வடகொரியாவுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பின்போது இடம்பெறவுள்ள கூட்டங்கள், அல்லது பயணத்தின் நோக்கம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
வட கொரியா கடந்த மாத தொடக்கத்தில் இருந்து ரஷ்யாவிற்கு 1,000 க்கும் மேற்பட்ட உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்பியுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியது.
ரஷ்யக் கொடியிடப்பட்ட கப்பலில் கொள்கலன்கள் ஏற்றப்படுவதைக் காட்டும் படங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டது.
வெடிமருந்துகளுக்கு ஈடாக வட கொரியா அதிநவீன ரஷ்ய ஆயுத தொழில்நுட்பங்களை நாடுவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
(Visited 18 times, 1 visits today)