போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள் – பாதுகாப்பளித்த நேட்டோ!

போலந்து வான்வெளியில் ஒரே இரவில் “பெரிய எண்ணிக்கையிலான” ரஷ்ய ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு பிரதமர் கூறினார்.
இது நேட்டோ நாட்டின் விமானப்படையின் பதிலடியைத் தூண்டியது. அத்துடன் நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்திய அந்த ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன,” என்று பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
நேட்டோவின் பொதுச் செயலாளர் மற்றும் எங்கள் நட்பு நாடுகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
போலந்து மற்றும் அதன் கூட்டணி விமானங்கள் – டச்சு F-35 போர் விமானங்கள் “போலந்து வான்வெளியில் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுவதற்காக” இரவு முழுவதும் வான்வழியாகச் சென்றதாக தெரிவிக்கப்படுகுிறது.
(Visited 1 times, 1 visits today)