ஐரோப்பா

உக்ரைனில் பேருந்தின் மீது விழுந்த ரஷ்யாவின் ஆளில்லா விமானம் – 09 பேர் பலி!

வடகிழக்கு உக்ரைனில் ஒரு பேருந்தை ரஷ்ய ஆளில்லா விமானம் மோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள பிராந்திய தலைநகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ரஷ்யாவும் உக்ரைனும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த தாக்குதல் குறித்து ரஷ்யா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, மேலும் உக்ரைன் ஜனாதிபதி இந்த தாக்குதல் பொதுமக்களை வேண்டுமென்றே கொல்ல நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் பிராந்திய தலைநகரான சுமியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!